Saturday, September 3, 2011

பாரியோ நீ மாரியே....!

முதல் துளி விழுந்ததும்
மூலை முடுக்குகளில் சிலர்...
மேலும் தொடர்கிறாய் விடாமல்
மல்கிய குரலோடு உன் அழுகையை...
ஊர்வலம் போகிறது ஆங்கே
உன்னை எதிர்த்து கறுப்புக் கொடி ஏந்தி!
யாருடைய ஆறுதலுக்காக
யாசித்து நிற்கிறாய் என்று புரியவில்லை!

காற்றும் மேகமும் உறுதுணையாய்க்
காவந்து செய்து உன் துயர் நீக்கப் பாடுபட,
நீட்டிக்கிறாய் உன் பிடிவாதத்தை...
நீயும் மனிதனைப் போல் தானோ?
உன் கண்ணீரில் காலம் காலமாய்
உல்லாசமாய் உள்ளம் நனைக்கும்
வேண்டாத உறவுக்கும், தேறாத அன்புக்கும்
தேடித் தேடி அலைகிறாய் ஏனோ?


4 comments:

  1. உன் கண்ணீரில் காலம் காலமாய்
    உல்லாசமாய் உள்ளம் நனைக்கும்
    வேண்டாத உறவுக்கும், தேறாத அன்புக்கும்
    தேடித் தேடி அலைகிறாய் ஏனோ?//


    மழை குறித்து வித்தியாசமான முறையில் சிந்தித்து
    மிக அழகான படைப்பைத் தந்துள்ளீர்கள்
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  3. மழை பற்றி எப்போதும் போன்ற வர்ணிப்பு இன்றி வித்தியாசமான சிந்தனை !! பாராட்டுக்கள் !தொடர்ந்து எழுதுங்கள் !

    ReplyDelete
  4. மிக்க நன்றி! படைப்புகள் தொடரும் என்றென்றும்! :)

    ReplyDelete