Sunday, September 5, 2010

சமுதாயச் சீர்திருத்தம் - சீரிய வழி!!

திருத்த வேண்டி சமுதாயத்தை
திரட்டி வந்தேன் திரள் திரளாய்...
உரைத்துப் பார்த்தேன் மக்களுக்கு
உரிமைக்காகக் குரல் கொடுக்க...
உணர்ந்தோர் என்பக்கம் என்றிட்டேன் !!!
மாறிடக் கண்டேன் அனைத்தும்
மேலும் குறைகள் தோன்றவில்லை எனக்கும்!
மண்ணில் வாழும் வழி கண்டேன்
மாறிவிட்டேன் நானும் சமுதாயத்தின் பொருட்டு !!!

Thursday, September 2, 2010

அவளுக்கென்று ஒரு பாடல் ...

ஆற்றல் கொண்ட உலகனைத்தும் 
போற்றிப் பாடிட முன்வருமோர் 
ஒப்பிலா உன்னதப் படைப்பவளே
எப்பொழுதும் இப்பாரில்!!!
உருகும் உள்ளம் அதுகொண்டே 
உறுதியுடன் என்றும் இருந்து 
இறுதிவரையில் வென்றிடவே 
உறுதுணையாய் ஊக்கமளித்தாய் !
எண்ணிலடங்கா பணியாவும் 
கண்ணிமைக்கும் நொடியினிலே 
துணிந்து என்றும் செயலாற்ற 
துடிப்பாய் நின்று செயல்பட்டாய் !
பதித்த தடங்கள் ஒவ்வொன்றும் 
உதித்ததுவோ உன் தயவாலே 
மதிக்க வேண்டிய உள்ளங்கள் 
மாறிப் போனதன் மாயமென்ன ?
என்னுள் மூழ்கிய எனக்கே தான் 
எழுச்சியூட்டிய புத்தொளியே 
எளிமையின் சிகரம் உனக்காக 
என்னால் இயன்ற பாடலொன்று !!!

இறுதியின் தொடக்கம்

உணர்ச்சிப் பெருக்கைத் தூண்டிடவே
ஊர்ந்து வரும் எதிர்காலமே -
தொலைவில் இல்லை நீ !!!
தொடர்ந்தாட்கொள்ளும் எண்ணங்களில்
ஆங்கே எங்கோ ஓரிடத்தில் பற்பல மனங்கள்
ஆர்ப்பரித்து  நிற்பது உனக்குத் தெரிகிறதா ?
ஆம்! வரவேற்றோம் உன்னை நாங்கள் -
ஆனந்தம் காண்போமென்று அறியாமலே !
உணர்த்திவிட்டாய் நீயதனை எங்களுக்கே  - பின்
 உரிமையதனைப்  பறிப்பதுவும் முறைதானோ ?
பயின்றோம் , கற்றோம் வாழ்வதனை
பல சூழலில் என்றும் கடைப்பிடித்தோம் !
நட்பின்  ஆழம் அறிந்திடவும் - அதில்
நன்றாய் மூழ்கித் திளைத்திடவும்
நண்பர் கூட்டம் வளர்ந்ததுவே!
நாளும் அதுவோ மேம்படவே
நாளை இறுதி என்றாயே -
நியாயம் கருதிப் பகர்வாயோ??
விட்டுப் பிரிய மனமில்லை
தொட்டுத் தொடரும் என்றறிந்தும் !

இறுதியின் தொடக்கம் துவங்கிடவே
இன்பம் அதுவோ விலகியதே !
மனமே நீயும் பதறாதே
மாற்றம் கண்டு கலங்காதே !
மானுட வாழ்க்கை என்பதனில்   
மாறும் நிலைதான் உண்டல்லவோ?
பருவம் இதுவோ கல்லூரியிலே
பின்னும் தொடரும் நீ நினைத்தால் !
மறவற்க இதனை மனம்கொண்டே
மாண்டாலும் நீங்காதே இந்நட்பே !!!