Friday, November 12, 2010

விழித்திடுமின்!!!

உரிமை கேட்டு ஆர்ப்பரித்தால் 
உனக்கேன் வீண்பழி என்றாரே 
உலகில் உறையும் ஓருயிர்க்கும்
உன்னத உரிமை உண்டல்லவோ??
கேட்டுப் பெறுங்கள் அதுதனையே 
ஓட்டுரிமை என்ற பெயராலே !
நாட்டின் பெருமை ஒவ்வொன்றும் 
பட்டியலிட்டுக் காட்டிடவே!!!

எண்ணங்கள் ஓராயிரம்....

ஆயத்தம் கொண்டேன் தந்தையே நான் 
அகிலமெங்கும் உன் புகழுரைக்க !
ஆட்கொண்டாய் என்னைப் பல விதமாய் 
அன்றாடம் என் வாழ்வதிலே !

எண்ணிப் பார்க்கிறேன் நானும் தான் 
பண்ணிய பணிகள் ஒவ்வொன்றும் !
சித்தமோ சிறப்பாய்த் தேடிடவே 
நித்தமும் அதுவோ தொடர்ந்திடுதே !


வேதனை அதனை உணர்த்திடவே - அதில் 
சாதனை கண்டிட ஊக்கமிளித்தாய் !
வேறென்ன வேண்டும் என்றாங்கே 
சர்வமும் கொண்டு பின்தொடர்ந்தாய் !


வார்த்தைகளில்லை என்னிடமே 
கோர்வையாய் என்றும் எடுத்துரைக்க !
ஏட்டில் எழுதிட முயன்றிட்டேன் - அது சிறு 
கூட்டில் அடைத்தல் போலன்றோ ?


தேடுகிறேன் இன்றும் நான் 
தரணியில் உள்ள திசைதோறும்...
வழியதுவோ யாதென்று
வணங்கி உன்னை வழிபடவே !!!


எண்ணங்கள் அவையோ பலவிருக்க 
என் சிந்தனை ஏட்டில் திரட்டியதனை 
மறவாமல் ஓர்நாள் வெளிக்கொணர்ந்தே 
மறைவேன் இம்மண்ணிலே !!!

பிரிவு

வட்டமிட்டுச் சுழன்று வந்தேன் தினம்தினமே 
வாட்டம் காணவோ நினைப்பில்லையே !
வருங்காலம் அதுவோ நன்கறிந்தால் 
வென்றிருப்பேன் அதனை மதியாலே !


பார்க்கத் துடித்த இமைகளுக்கோ 
பதிலைத்  தேடி அலைந்திடவே 
பிரிவின் குரல் பரிவோடு 
பாய்ந்ததங்கே பாற்கடல் போலே !


தனிமை அதுவோ விரட்டிடவே 
தவிப்பில் தத்தளித்த மனமதுவோ
தேடியதங்கே உறவைத்தான் 
தேக்கமுற்ற நினைவுகளில் !


பாசப் பிணைப்பை உணர்த்தியதே 
பிரிந்த நொடி ஒவ்வொன்றும் 
பார்வை பட்ட மறு நொடியே 
பாரை வென்ற உணர்வதுவோ 


சொல்லில் வெளிப்பட மறுத்திடுமோர்
சொல்வதற்கறியா இன்பமதே !
சொர்க்கம் அதுவோ உண்டென்றால் 
இதுதான் அதன் மறுபெயரோ ?

நிரந்தரம் என்று ஒன்றில்லையே 
நித்தமும் காலம் மாறுவதால் !
நீக்கமற எங்கும் என்றும்தான் 
நினைவுகள் நிரம்ப வருகையிலே 

பிரியும் தருணம் எம்முறையும்
பற்றுதல் அதனைப் பெருக்கிடுதே   
உணர்ந்து என்றும் செயல்பட்டால்
உறவுகள் அதுவோ மேம்படுமே !!