Saturday, June 18, 2011

விடைபெற...

சிக்கித் தவிக்கிறேன் அனுதினமும்- பள்ளிச்
சீருடை அணியும் இவ்வயதில்.................!
பயில்கிறேன் நானோ பல விதமாய்
பணத்தின் பிடிதான் உயர்ந்ததென்று!
ஏழ்மை நிலை எனை வாட்ட,
ஏங்கிப் பார்க்கிறேன் கனவுகளில் கல்வியை!!
தேவைகளும் ஆசைகளும் எதிரெதிரே வீற்றிருக்க;
தேங்கிக் கிடக்கும் கவலையிலும்
ததும்ப நிற்கும் கண்ணீரிலும்
திக்கு தெரியாமல் தேடுகிறேன்...
தீவிரமாகத்தான் ... கல்வியை இல்லை...
தினக்கூலிக்கு "ஆள் தேவை" என்ற பலகையை!
சுமை தூக்கித் தருகிறேன்...பணம் வேண்டாம்
சற்று என் மனச் சுமை இறக்கித் தருவீரோ???

2 comments:

  1. அருமையான படைப்பு
    தேவைகளும் ஆசைகளும் எதிர் எதிராய்...
    சொல்லவேண்டியதை
    மிகத் தெளிவாகவும்மிகச் சரியாகவும்
    சொல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா!!!

    ReplyDelete