இலைகளுக்கிடையில் இன்னமுதாய்
காரிருள் அதுவோ படர்ந்திடவே
காத்திருந்தேன் நானும் தான்!
தவழ்ந்து வந்த வெண்மதியே - இன்று
வெந்தழல் போன்ற காட்சி ஏனோ ?
கூவி அழைத்தேன் - தோழா நீ
குவிந்த அழகினைக் கண்டாயோ
மதியின் முகத் தோற்றத்திலே!
அன்றி , விரைந்து அதனைக் கண்டிடுவாய்!
தேடுதல் வேட்டை துவங்கிடவே
தேக்கமுற்ற வெண்மதியே - நீ
தோழனைக் கண்டு நாணமுற்றே
கருமுகிலில் புகுந்து கொண்டாயோ?
எண்ணிப் பார்த்தேன் சில நொடிகள்
விந்தையூட்டும் வெண்மதியே மறைந்தாலும் நீ
நிறைந்தாயே எந்தன் சிந்தையிலே ! - இனி
மறைந்தாலும் தேய்ந்தாலும் கண்டிடுவேன் - உன்னை
மதியே எந்தன் மதியாலே !!!
என்றும் நீயோ தென்படவே
மலைகளுக்கிடையே மாயமதாய் இன்றோ நீ மறைந்ததேனோ?
காரிருள் அதுவோ படர்ந்திடவே
காத்திருந்தேன் நானும் தான்!
தவழ்ந்து வந்த வெண்மதியே - இன்று
வெந்தழல் போன்ற காட்சி ஏனோ ?
கூவி அழைத்தேன் - தோழா நீ
குவிந்த அழகினைக் கண்டாயோ
மதியின் முகத் தோற்றத்திலே!
அன்றி , விரைந்து அதனைக் கண்டிடுவாய்!
தேடுதல் வேட்டை துவங்கிடவே
தேக்கமுற்ற வெண்மதியே - நீ
தோழனைக் கண்டு நாணமுற்றே
கருமுகிலில் புகுந்து கொண்டாயோ?
எண்ணிப் பார்த்தேன் சில நொடிகள்
விந்தையூட்டும் வெண்மதியே மறைந்தாலும் நீ
நிறைந்தாயே எந்தன் சிந்தையிலே ! - இனி
மறைந்தாலும் தேய்ந்தாலும் கண்டிடுவேன் - உன்னை
மதியே எந்தன் மதியாலே !!!